மது ஒழிப்பு போராளியின் நிலை!
மது ஒழிப்புக்காக போராட்டம் செய்து வரும் நந்தினிக்கு ஜூலை 5ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ள நிலையில் ஜூலை 9 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோதே மதுவுக்கு எதிராக போராடி வருபவர் நந்தினி. வழக்கறிஞராக நந்தினி இருந்து வரும் நிலையில் அவர் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றம் என்று நந்தினி வாதாடினார்.
நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு ஜூலை 9 வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட,நந்தினி கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.