ஆப்சை கண்டுபிடித்து ஆப்பு அடிக்கிறீங்க... மக்கள் பீதி...

Sekar Tamil
புதுடில்லி:
இந்தியாவில் சுமார் 59 சதவீதம் நிலப்பகுதிகளுக்கு கடுமையான அல்லது மிதமான அல்லது லேசான நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிலஅதிர்வு மையம் எச்சரித்து பீதியை கிளப்பி உள்ளது.


என்ன விஷயம் என்றால்... தேசிய பேரிடர் மேலாண்மை கழகம் சார்பில் நிலஅதிர்வு தொடர்பான புதிய வரைபடம் ஒன்று ஆப்ஸ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இது இன்னும் 3 மாதங்களில் மொபைல் போன்கள் மூலம் செயல்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட உள்ளது. இதை யூஸ் செய்தால் ஒவ்வொருவரும் தங்களின் வீடு அல்லது அலுவலகம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் வகையில் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இந்த ஆப்சை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில்தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவில் உள்ள 59 சதவீதம் பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் தன்மை கொண்டவை என்பது தெரிய வந்துள்ளது.


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30.4 கோடி மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாய நிலையில் உள்ளனர். இதில் 95 சதவீதம் அதிக பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளது எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. அட என்னாங்கப்பா... ஆப்சை கண்டுபிடித்து ஆப்பு அடிக்கிறீங்க...


Find Out More:

Related Articles: