மக்கள் செல்வனின் கடின உழைப்பு

frame மக்கள் செல்வனின் கடின உழைப்பு

SIBY HERALD
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க வந்து கிட்டத்தட்ட ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவர் ஆகிவிட்டார். கடைசியாக கவண் மற்றும் விக்ரம் வேதா ஆகிய பிளாக்பஸ்டர் படங்களில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அடுத்ததாக இவர் நடிப்பில் இந்த மாத இறுதியில் ஜுங்கா வர உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு காமெடி டானாக நடித்துள்ளார்.



மேலும் இதனை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் தன்னை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் சீதக்காதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.



இந்த படத்தில் விஜய் சேதுபதி எழுபது வயதான ஓரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக விஜய் சேதுபதி நான்கு மணி நேரம் மேக்கப் போட வேண்டிய நிலையில் இருந்தாலும் கூட பொறுமையாகவும் கோபப்படாமலும் ஒத்துழைத்து வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்திற்காக விஜய் சேதுபதி நிச்சயமாக தேசிய விருது வெல்வார் என்று நம்பிக்கையாக கூறுகின்றனர். 


Find Out More:

Related Articles: