சசியுடன் ரிசார்ட் எம்.எல்.ஏக்கள் சந்திப்பு.. "பரபரப்பான" ஜெயலலிதா போட்டோவை வெளியிட வலியுறுத்த திட்டம்!
குடகு ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் இன்று சின்னம்மா
சசிகலாவை சந்திக்கும் போது ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த புகைப்படம்
ஒன்றை வெளியிட அனுமதி கோர உள்ளதாக
பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் மற்றும் முதல்வர்
எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை என்று
இந்த காரணத்தினால் பரபரப்பின் கூடாரமாக மாறியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இன்று நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்குகள் விசாரணையை நோக்கி பத்திரிக்கையாளர்கள் படையெடுப்பு இடமாக பரபரப்பாக மாறியுள்ளது ஹைகோர்ட். இந்நிலையில் சொகுசு குடகு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்,டிடிவி தினகரனுடன் சேர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சின்னம்மா சசிகலாவை இன்று சந்திக்கின்றனர்.
இது குறித்து
பேச்சு கடந்த 3 தினங்களாகவே தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்து வருகிறார். இதனிடையே
இன்று சசிகலாவை சந்திக்கும் போது அனைவரும் கேள்வி எழுப்பும் ஜெயலலிதா சிகிச்சைக்கான
ரகசிய புகைப்படத்தை வெளியிட அனுமதி கோர உள்ளதாக தெரிகிறது. மக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவைப்
அப்படியே அள்ளுவதற்காக புகைப்படத்தை வெளியிட்டு நன்மதிப்பை பெற்றுவிடலாம் என்று இந்த
அதிரடி நடவடிக்கையை எடுக்க அவர்கள் விருப்பம் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.