மனைவி உடலை குப்பைகளால் எரித்த கணவன்... கொடுமை...

frame மனைவி உடலை குப்பைகளால் எரித்த கணவன்... கொடுமை...

Sekar Tamil
மத்தியபிரதேசம்:
கொடுமையிலும் கொடுமையாக இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. என்னாச்சு இந்தியாவிற்கு?


விஷயம் இதுதான். மத்தியப்பிரேதச மாநிலம் நீமச்சலில் தன் மனைவியை சுடுகாட்டில் எரிக்க பணம் இல்லாததால் குப்பைகளை வைத்து கணவர் ஒருவர் எரித்த சம்பவம்தான் தற்போது நாடு முழுவதும் பற்றி எரிகிறது. நம் இந்தியாவிற்கு என்னவாச்சு?


 இறந்த மனைவியை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் தோளில் சுமந்து சென்ற கணவர், ஆம்புலன்சில் இறந்த மகளை உடலுடன் நடுரோட்டில் இறக்கி விட்டதால் கைகளில் சுமந்து சென்ற தந்தை... என்று பல வேதனை சம்பவங்கள் ஊடகங்களில் வெளி வந்து மனதை இறுக்கிப்பிடித்து வருகிறது.


 இந்நிலையில் அடுத்த வேதனையாக நீமச்சில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் இறந்த தனது மனைவியை எரிக்க பணம் இல்லாததால் குப்பைகளை போட்டு எரித்த அதிர்ச்சிதான் நாடு முழுவதும் தற்போது பற்றி எரிகிறது.


 ஜகதீஷ் என்ற அந்த நபர் கூறுகையில், எனது மனைவியை எரிக்க பணம் இல்லை. அங்குள்ள நகராட்சி அதிகாரிகள், பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு அதிகாரியை பார்க்க சொன்னார்கள். ஆனால் அவரும் பணம் இல்லை என்று மறுத்துவிட்டார். இதனால் வேறு வழியின்றி... அங்கு கிடந்த மரக்கட்டைகள், பாலிதீன் குப்பைகள், டயர் போன்றவற்றை பொறுக்கி வந்து எனது மனைவியை எரித்தேன் என்று அழுதபடி கூறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பற்றி எரியும் தீயாக மாறி உள்ளது. 



Find Out More:

Related Articles:

Unable to Load More