இசை நடிகரிடம் இருந்து எஸ்கேப்பான இயக்குனர்கள்

Sekar Chandra
சென்னை:
எனக்கு இன்னொரு பேர் இருக்குன்னு முண்டா தட்டிய இசை நடிகர் கிட்ட இப்ப யாரும் இசையமைச்சு தாங்கன்னு கேட்க கூட வரமாட்டேங்கிறாங்களாம். காரணம்.


முதல் பேய் படம் கொடுத்த வெற்றி இசை நடிகரை முழு நேர நடிகராக மாற்றியே விட்டுடுச்சு. இப்ப அடுத்தடுத்து படங்கள் வெளியாகி முதலுக்கு மோசம் இல்லைப்பா என்ற ரேஞ்சுக்கு வந்ததால் இவரை வைச்சு படம் எடுக்க தயாரிப்பாளர்கள் நான் முந்தி, நீ முந்தின்னு வர்றாங்களாம். இதுனால தான் ஒத்துக்கிட்ட இசையமைக்கிற படங்களுக்கு இவர் கொடுக்கிற இசை சுமார் ரகமாக இருக்காம். 


நடிக்க நிறைய படம் வந்ததால இவரால இசையில் சரியா கவனம் செலுத்த முடியலையாம். அதான் இவரை புக் செய்யலாம்னு வர்ற இயக்குனர்கள் கூட விஷயம் கேள்விப்பட்டு நைசா ரிவர்ஸ் கியர் போட்டு ஓட்டம் பிடிக்கிறாங்களாம். 


Find Out More:

Related Articles: