என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு இது சர்ச்சை இல்ல... சேரன்...

frame என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு இது சர்ச்சை இல்ல... சேரன்...

Sekar Tamil
சென்னை:
என்னைப்பற்றி தெரிந்தவர்கள் இதை சர்ச்சையாக்க மாட்டார்கள் என்று இயக்குனர் சேரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.


எதற்கு தெரியுங்களா? ஈழத்தமிழர்கள் பற்றி பேசிய பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார் அல்லவா... அதற்குதான். சேரனின் பேச்சுக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில், தற்போது சேரன் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டு தன் தரப்பை வெளிப்படுத்தி உள்ளார்.


"என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன் யாரை பற்றி பேசியிருப்பேன் என புரிந்திருக்கும். என்னை தெரியாதவர்களுக்கு என்ன விளக்கம் சொல்வது".


"இதுவரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு டிவிடி வருகிறது. ஆன்லைனில் ஏற்றுகிறார்கள் என்று கதறியபோது இப்போது எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இதை கண்டித்து எதுவும் தெரிவிக்கவில்லை.


"உலகெங்கும் நண்பர்களை கொண்டு (அவர்களும் இலங்கைத்தமிழர்கள்தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்றபோது தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்."


"ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு... நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள்."


இப்படி நீண்டதொரு அறிக்கையை கொடுத்து தன்னிலை விளக்கம் சொல்லியுள்ளார். இவரது கருத்திலும் உண்மைகள் உள்ளதே என்றும் சொல்கின்றனர் நடுநிலையாளர்கள்.


Find Out More:

Related Articles:

Unable to Load More