போலீஸ் பூதம் வரவிருக்கும் நாள்!

SIBY HERALD
சீயான் விக்ரம் கடைசியாக தமிழில் பொங்கல் வெளியீடான ஸ்கெட்ச் படத்தில்  நடித்தார். வாலு புகழ் விஜய் சந்தர் இயக்க்கிய இந்த படம் படு தோல்வி அடைந்தது. இந்த படத்தை தொடர்ந்து சீயான் அவர்கள் தனது பழைய வெற்றி படமான சாமியின் இரண்டாவது பாகத்தில் நடிக்க துவங்கினார். மீண்டும் ஹரியே இயக்கியுள்ள இந்த படத்தில் சீயான் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க அவரது வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார்.



ஒரு மாதத்துக்கு முன்பு வெளியான இந்த படத்தின் ட்ரைலர் பலராலும் கலாய்க்கப்பட்டும் ட்ரோல்கள் மீம்கள் போட்டு கிழிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சாமி ஸ்கொயர் படம் ஆகாது இருபத்தி நான்காம் தேதி அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலரால் மிகப்பெரும் பாதிப்பில் இருக்கும் இந்த படம் மேலும் பல நெகட்டீவ்களோடு தான் வருகிறது. முதல் பாகத்தில் நடித்த அழகி த்ரிஷா இந்த படத்தில் இல்லை.



நகைச்சுவை பலம் கொடுத்த விவேக் இல்ல ஆனால் சூரி இருக்கிறார். திருநெல்வேலி அல்வாடா, அய்யய்யோ புடிச்சிருக்கு, கல்யாணம் தான் கட்டிக்கிட்டு, இதுதானா போன்ற ஹிட் பாடல்கள் போட்டு கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்தில் இல்லாமல் தேவி ஸ்ரீபிரசாத் இருக்கிறார். இப்படி பல மைனஸ்களுடன் இந்த படம் ஆகஸ்டில் வர உள்ளது. பார்க்கலாம் ஏற்கனவே பாதாளத்தில் உள்ள சியானின் கேரியரை சாமி ஸ்கொயர் தூக்கி நிறுத்தும் தூக்கி போட்டு உடைக்குமா என்று. 


Find Out More:

Related Articles: