வரி விலக்குக்கு "வேட்டு" தில்லுக்கு துட்டுக்கு "ஆப்பு"

Sekar Chandra
சென்னை:
இப்படி ஆப்பு வைச்சுட்டாங்களேன்னு விழி பிதுங்கி போயிருக்காம் 'தில்லுக்கு துட்டு' திரைப்பட குழு. 


என்ன விஷயம் தெரியுங்களா? இந்த படத்தோட டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியே தணிக்கைக்கு இந்த படத்தை அனுப்பி இருக்காங்க. படம் பார்த்த தணிக்கை குழுவினர்  'யூ/ஏ சர்டிபிகேட் கொடுத்தாங்க பாருங்க... இதுதான் அந்த படக்குழுவிற்கு விக்கலை கொடுத்து விட்டது.


இந்த சர்ட்டிபிகேட்டால் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையை போச்சாம்... போயே போச்சாம். போனால் போகட்டும் போடா என்று படத்தின் மீதுல்ல நம்பிக்கையில் வெற்றி எங்கள் பக்கம்தான் என்று உள்ளனராம். 


Find Out More:

Related Articles: