தனிக்கட்சி தொடங்கி சுயமாய் ஆட்சியை பிடித்த கேஜ்ரிவாலை திடீரென சந்திக்கும் கமல்!
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் நம் தலைமை, டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வரும்போது நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேச உள்ளார். டிவிட்டரில் நடிகர் கமல் தொடர்ந்து, அரசியல் கருத்துகளை
பளிச் என்று தெரிவித்து வருகிறார். அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுவருவதாக கமல் ஹாசன் வெளிப்படையான குற்றச்சாட்டுகளையும்
தன் கருத்துக்களையும் முன்வைத்து வருகிறார்.. ஓணம் பண்டிகையையொட்டி கேரள முதல்வர் பினராய் விஜயனையும் நேரில் சந்தித்தார்.
இந்த நிலையில்தான், கமல் ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க அதிக வாய்ப்பிருப்பதாக ஊகம் எழுந்துள்ளது. கேரள முதல்வரை சந்திக்க சென்றபோது, தான் அந்த கேரள அரசியலை கற்க வந்துள்ளதாக தெரிவித்தார் கமல். இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று கமல் சென்னையில் சந்திக்கிறார். ஆம் ஆத்மி நிர்வாகி ஒருவர் டெல்லியில் இதுகுறித்து கூறுகையில், "சென்னைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இன்ரு செல்கிறார். அங்கு நடிகர் கமல் ஹாசனை அவர் சந்தித்துப் நேரில் பேசவுள்ளார்.
அரசியல் சம்பந்தமாக இருவரும் கலந்துரையாடுவார்கள் எனத் தெரிகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையத்தையும் கேஜரிவால்
நேரில் பார்வையிட உள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.