கோடி... கோடியாய்... கொட்டி சுற்றுலா பூங்கா அமைப்பு...திறப்பு...

frame கோடி... கோடியாய்... கொட்டி சுற்றுலா பூங்கா அமைப்பு...திறப்பு...

Sekar Tamil
ஷாங்காய்:
கோடி... கோடியாய் கொட்டி சீனாவில் ‘ஹெபே வாண்டா சிட்டி’ என்ற சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது.


சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹெபே நகரில் மிக பிரமாண்டமான சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இது 160 ஹெக்டேர் நிலபரப்பளவில் அமைந்துள்ளது என்றால் அதன் பிரமாண்டத்தை யோசித்து கொள்ளுங்க...


‘ஹெபே வாண்டா சிட்டி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்காவில் கேளிக்கை பூங்கா, ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் என்று எல்லாமே அடங்கி இருக்கிறது.


டாலியன் வாண்டா குரூப் நிறுவனம் இந்த சுற்றுலா பூங்காவை ரூ.35 ஆயிரம் கோடியில் அமைத்துள்ளது.


தனது தொழில் போட்டி எதிரியான வால்ட் டிஸ்னிக்கு போட்டியாக இதை உருவாக்கியுள்ளதாக இதன் உரிமையாளர் வாங் ஜியாங்லின் தெரிவித்தார். இந்த பூங்காவை சுற்றிப்பார்க்க இப்பவே கூட்டம் அம்முதாம்... அதிரவைக்குதாம்...



Find Out More:

Related Articles:

Unable to Load More