சசியின் படத்தை தூக்கி எறிய தயாரா???

SIBY HERALD


அதிமுக தலைமை கழகத்தில் உள்ள சசிகலா படத்தை உடனடியாக அகற்றி விட வேண்டும் என எடப்பாடி அணிக்கு ஓபிஎஸ் அணி முதல் கோரிக்கை விடுத்துள்ளது. சசிகலா படத்தை அகற்றி அதிமுக தலைமை கழகத்தின் புனிதத்தைர காப்பாற்ற வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணி கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளது.




 சசிகலாவின் புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து உடனே    தூர அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று அம்மாவின் விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும் தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மதுசூதனன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




நேற்று மாலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ.பி.எஸ். அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் பேச்சு நடத்த இருப்பதாக இருந்தது. சசிகலாவை வெளியேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியின் சார்பில் கே.பி.முனுசாமி மற்றவர்களின் சார்பாக தெரிவித்ததை அடுத்து பேச்சுவார்த்தைக்கு திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டது


Find Out More:

Related Articles: