விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் சட்டசபை கூட்டம்

Sekar Tamil
சென்னை:
4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (29ம் தேதி) மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் போக்குவரத்து துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வரும் நிலையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரசு விடுமுறை விடப்பட்டது. இதனால் சட்டசபைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 


விடுமுறைக்கு பிறகு சனி, ஞாயிறு என்பதால் இன்று வழக்கம் போல் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில் ஒரு வார சஸ்பெண்ட் காலம் முடிந்து திமுக உறுப்பினர்கள் இன்று அவைக்கு வர உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Find Out More:

Related Articles: