பெங்களூரு:
பெங்களூரு வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் இருப்பதால் இயல்பான நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொழில் நகரமான பெங்களூருவில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த கலவர நிலை மாறி இயல்பு நிலை திரும்பி வருகிறது. பள்ளி, கல்லூரிகள், கடைகள், ஓட்டல்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பஸ் போக்குவரத்தும் நடந்து வருகிறது. இருப்பினும் பாதுகாப்பு கருதி தொடர்ந்து 3வது நாளாக 16 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்காக ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை மற்றும் கலவரத்தில் ஈடுபடுபவர்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்ட நிலையில் தற்போது இயல்பான நிலை திரும்பி உள்ளது என்று கூறப்படுகிறது.