பவர் பாண்டி திரைப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

Sekar Tamil
நடிகர் தனுஷ் முதன்முறையாக 'பவர் பாண்டி' திரைப்படத்தை இயக்குகிறார். இதில் ராஜ் கிரண், நதியா, பிரசன்னா, சாயா சிங்க் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். மேலும் இயக்குனர் கவுதம் மேனன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பதை நாம் இன்று காலையில் தான் பார்த்தோம். 


இதையடுத்து தற்போது இன்னொரு பிரபலம் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் யார் தெரியுமா? தெரியலையா.... வேறு யாருமில்லை....


நம்ம தனுஷ் தான். சினிமாவில் பணியாற்றும் ஸ்டண்ட் கலைஞர்களை கொண்டு உருவாகும் இந்த படத்தில், தனுஷ், சிறு வயதில் உள்ள ராஜ் கிரண் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 


மேலும் இந்த படத்தை 'வொண்டர்பார் பிலிம்ஸ் பேனர்' சார்பில், தனுஷ் தயாரிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.


Find Out More:

Related Articles: