க்யூட் கீர்த்தி ஆக்ட் பண்ணுவாரா

frame க்யூட் கீர்த்தி ஆக்ட் பண்ணுவாரா

SIBY HERALD
இதுவரையில் க்யூட்டான கதாநாயகி மற்றும் லூசுப்பெண் வேடங்களில் மட்டுமே நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், முதல்முறையாக ஒரு மிகவும் சீரியஸான வேடத்தில் நடித்துள்ள படம் தான் மகாநடி. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி பழம்பெரும் நடிகை சாவித்ரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நடித்துள்ளார். 


Image result for mahanati movie stills


இதற்கு முன் ரஜினிமுருகன், இது என்ன மாயம், மற்றும் நேனு சைலஜா படங்களில், நன்றாக நடிக்க கூடிய திறமை உள்ள பெண் என அறியப்பட்ட கீர்த்தி அதன் பின்னர் தொடரி படத்தின் மூலம் பரவலாக கலாய்க்கப்பட்டார். அந்த படத்தில் அவரது ஆக்ட்டிங்கும் எக்ஸ்பிரஷன்களும் அனைவராலும் கலாய்க்கப்பட்டு மீம்ஸ் மற்றும் ட்ரோல்ஸ் என கிண்டல், கேலிக்கு ஆளானார் கீர்த்தி. 


Image result for mahanati movie stills


மகாநடி படத்தில் புக் ஆனபோது கூட அனைவரும் இவரை ஏன் நடிக்க வைக்கிறீர்கள் என கேட்டு, அனுஸ்காவையோ நித்யா மேனனையோ நடிக்க வைத்திருக்கலாமே என கேட்டனர். ஆனால் தற்பொழுது வெளியான படத்தின் புகைப்படங்கள், ட்ரைலர் பார்த்து, கீர்த்தி அச்சு அசலாக சாவித்ரி அம்மையார் போலவே இருப்பதாக அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் படம் நாளை வெளியாகிறது. பாப்போம் தோற்றத்தில் சாவித்ரியை அச்சடித்த கீர்த்தி, மகாநடி படத்தில் நடிப்பில் மிளிர்கிறாரா என்று. 


Find Out More:

Related Articles: