பெரிய நம்பர் நடிகையை யாராலும் இப்படித்தான் இவருன்னு கணிக்க முடியவே முடியாது போல... எப்படிங்கிறீங்களா?
ஒரு பக்கம் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு பெரிய நடிகர்கள் படத்துல நடிக்க சம்மதம் கொடுக்கிறார். மற்றொரு பக்கம் புதுமுக ஹீரோக்களோடயும் நடிக்கிறார்.
பெரிய நடிகர்கள், சின்ன நடிகர்கள்ன்னு பாரபட்சமே பாராமல் ஜோடி போட ரெடி என்கிறார். இவரு அம்புட்டு நல்லவங்களான்னு கோடம்பாக்கம் ஆனந்த கண்ணீர் விட, அட போங்கய்யா... உங்க அழுகையை வீணாக்கிட்டீங்களேன்னு உண்மையை சொல்லியிருக்காரு கோடம்பாக்கத்து கோவாலு ஒருவர்.
என்ன உண்மை தெரியுங்களா? பணத்துக்கு பணமும் ஆச்சு... பெரிய ஹீரோவுடன் மட்டுமில்லாமல் சின்ன ஹீரோக்களுடனும் ஜோடி போட்டால் தான் "யூத் நாயகி" என்று எல்லாரும் சொல்லுவாங்க. சின்ன நடிகரு படம் 2 வாரம் ஓடினா போதும்... பெரிய நடிகர்கள் படம்னா... அது ஒருவாரம் ஓடினாலே போதும் நாம் நல்லா கல்லா கட்டிடலாம்னு செய்யறாரான்னு சொன்னாரே பாருங்க... எம்புட்டு விவரமா இருக்காங்க...!