ஓவியா இல்லா சீதக்காதி!!

J Ancie
"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்"  புகழ் இயக்குனர் பாலாஜி தரணீதரன், அதனை தொடர்ந்து, காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடிக்க "ஒரு பக்க கதை" திரைப்படத்தை இயக்கினார். வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இத்திரைப்படத்தை அடுத்து, தனது முதல் திரைப்பட நாயகன் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் திரைப்படம் "சீதக்காதி". 




பேஷன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் மென்மையான ஒரு காதல் கதையாகும். முதலில் சீதக்காதியில் காயத்ரி, ரம்யா நம்பீசன் மற்றும் ஓவியா ஆகியோர் கதாநாயகிகளாக ஒப்பந்தம் ஆயினர். ஆனால், தற்பொழுது ஓவியா, கமலஹாசன் நடத்தும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கி வருவதால் அவருக்கு பதிலாக பார்வதி நாயர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 




பார்வதி நாயர், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கும் "மஹேஷிண்டே பிரதிகாரம்" மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்க


Find Out More:

Related Articles: