நண்பர்களை தன்னுடைய புது படத்திற்கு ஒப்பந்தம் செய்த சிவகார்த்திகேயன்

Sekar Tamil
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெமோ' திரைப்படம் வரும் அக்டோபர் 7-ந்தேதி, பிரம்மாண்டமாக உலகெங்கும் வெளிவரவுள்ளது. இதையடுத்து அவர் மோகன் ராஜா இயக்கவுள்ள புது படத்தில் நடிக்க தற்போது தயாராகி வருகிறார்.


இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பசில், சினேகா, பிரகாஷ் ராஜ், சதிஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர் என்பதை நாம் முன்பே அறிந்தோம். 


ஆனால் தற்போது இதில் ரோபோ ஷங்கர், ஆர்.ஜெ.பாலாஜி இருவரும் நடிக்க புக்காகியுள்ளனர். இவர்கள் இருவரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.


Find Out More:

Related Articles: