படவாய்ப்புகளை குவிக்கும் 'ஜோக்கர்' இசையமைப்பாளர்

Sekar Tamil
'வாயை மூடி பேசவும்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஷான் ரோல்டன். இதையடுத்து 'சதுரங்க வேட்டை', 'முண்டாசுப்பட்டி', 'ஆடாம ஜெயிச்சோமடா' '144' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தார். ஆனால் இந்த படங்களில் எல்லாம் அவரது பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. 


ஆனால் சமீபத்தில் அவரது இசையமைப்பில் வெளிவந்த 'ஜோக்கர்' திரைப்பட பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் இடம்பெற்ற, 'என்னங்க சார் உங்க சட்டம்' பாடல் மெகா ஹிட்டானதால், ஷான் ரோல்டனுக்கு, 'ஜோக்கர்' திரைப்படம் திருப்பு முனையாக அமைந்துள்ளது. 


இந்த படத்தின் பாடல்களை கேட்ட நடிகர் தனுஷ் தற்போது தான் இயக்கும் 'பவர் பாண்டி' திரைப்படத்திற்கு ஷான் ரோல்டனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். 


இதே போல் நடிகர் விஷ்ணு விஷால், அவர் தயாரிக்கும் 3 வது திரைப்படத்தில், ஷான் ரோல்டனை இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். 


இவ்வாறு  ஜோக்கர் திரைப்படத்திற்கு பிறகு, ஷான் ரோல்டன் கைவசம் ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்து காணப்படுகின்றன.


Find Out More:

Related Articles: