வானிலை ஆய்வு செயற்கை கோளுக்கு கவுண்ட்டவுன் ஸ்டார்ட்.

Sekar Tamil
சென்னை:
கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆகிடுச்சு... ஆகிடுச்சுங்க... எதற்கு தெரியுங்களா?


வானிலை ஆய்வு செயற்கைக் கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியதுதான் அது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறியவும், முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், சூறாவளியை கண்டறிதல் உட்பட பலவற்றை அறிந்து கொள்ள ‘ஸ்கேட்சாட்–1’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது.


சென்னை அருகிலுள்ள பநீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைகோளை நாளை (26–ந்தேதி) காலை 9.12 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. 


இதற்கான 48 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 8.42 மணிக்கு தொடங்கியது.


Find Out More:

Related Articles: