காதும் காதும் வைத்தது போன்று காதலரை திருமணம் செய்த குட்டி ஐஸ்வர்யா ராய்

J Ancie

நடிகை ரியா சென் தனது நீண்ட நாள் காதலர் ஷிவம் திவாரியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் அற்முகமாகி நடிகையானவர் ரியா சென். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்தினார். தற்போது அவருக்கு சுத்தமாக எந்த மொழியிலும் மார்க்கெட் இல்லை.


அவர் தனது காதலரான ஷிவம் திவாரியை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்று பரவலாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் புனேவில் காதும் காதும் வைத்தது போன்று நேற்று அவர்காளது திருமணம் நடந்துள்ளது.


இருவீட்டார் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். 36 வயதாகும் ரியா சென்னின் அக்காவும்,  ரைமா  சென்னுக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரியாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.அவரை தமிழில் குட்டி ஐஸ்வர்யா ராய் என்று அழைத்தனர்

Find Out More:

Related Articles: