மனிஷா கொய்ராலா... 2ம் திருமணம் செய்ய முடிவாம்...

Sekar Tamil
மும்பை:


இரண்டாவது... இரண்டாவதாக மற்றொரு திருமணம் செய்து கொள்ள இருக்காராம். யார் தெரியுங்களா?


மணிரத்னம் அறிமுகம் செய்த மனிஷா கொய்ராலாதான். பம்பாய் படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களை வசப்படுத்தியவர் மனிஷா. பின்னர் இந்தியன், முதல்வன் என்று தமிழில் நடித்தார்.


தொடர்ந்து பாலிவுட்டில் முழு கவனத்தை திருப்பினார். பின்னர் நேபாளத்தை சேர்ந்த இவர் சாம்ராட் தகால் என்பவரை திருமணமும் செய்து கொண்டு பின்னர் டைவேர்ஸ்சும் வாங்கி விட்டார். தற்போது மும்பையில் தனியாக வசித்து வரும் மனிஷா ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக சொல்லியிருந்தார்.


இந்நிலையில் தன்னிடம் அதீத அன்பு காட்டும் ஒருவர் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறாராம். இந்த செய்திதான் பாலிவுட்டில் பற்ற வைத்த தீயாக பரவி வருகிறது.


Find Out More:

Related Articles: