செப்டம்பர் 9-ல் ..... தேவி....

Sekar Tamil
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், பிரபு தேவா மற்றும் தமன்னா ஜோடியாக நடித்து உள்ள திரைப்படம் 'தேவி'. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகுகிறது. 


கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு முழுவதும் அண்மையில் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்த படத்தின் பின்தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெறுகின்றன. 


இந்நிலையில் இந்த படத்தை படக்குழுவினர், வரும் செப்டம்பர் 9-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சோனு சூத், நடிகை அமலா பாலின் சகோதரர் மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்டரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை பிரபு தேவா தயாரிக்கிறார்.



Find Out More:

Related Articles: