பாலிவுட்டுக்கு பறந்த பாப்பா... ரெஜினா செம ஹேப்பி...

Sekar Tamil
சென்னை:
இப்ப இவரும் பாலிவுட்டுக்கும் போயிட்டார்... போயிட்டார் என்று தகவல்கள் வந்துள்ளன.


சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்தில் நடித்தவர் ரெஜினா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவருக்குதான் இப்போது செம லக் அடித்துள்ளதாம். என்னவென்று தெரியுங்களா? பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்புதாங்க அது.


லக்.. மேல லக்... என்பது போல பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பாம் அது. அல்வா திங்க கசக்குமா என்ன? அதுவும் திருநெல்வேலி அல்வாவே கிடைத்தால் தற்போது அந்த நிலையில்தான் உள்ளார் ரெஜினா.


Aankhen 2 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடந்துள்ளதாம். அப்புறம் என்ன ரெஜினாவிற்கு பெரிய தளம் கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்...


Find Out More:

Related Articles: