கும்பகோணத்தின் தென்மேற்கு பகுதியில், பட்டீஸ்வரம் என்ற கிராமம் உள்ளது. அங்கு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அனைவரும் பட்டீஸ்வரம் துர்க்கை கோவில் என்று அழைக்கின்றனர்.
இங்கு துர்கை அம்மன் சிறப்பாக விளங்குகிறாள். இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள். திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இத்தளத்திற்கு வந்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.
மேலும் குடும்ப துன்பத்தில் தவிப்பவர்கள், ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இக்கோயிலிற்கு வந்து, இங்குள்ள குளத்தில் நீராடி அம்மனை வழிபட்டால் மகிழ்ச்சி பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.