ஐந்து தமிழ்ப்படங்களில் நடிக்கும் நிவின்பாலி

Sekar Chandra
'நேரம்' படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகர் நிவின்பாலி. அதையடுத்து மலையாளத்தில் இவர் நடித்த 'பிரேமம்' படம் சூப்பர் ஹிட்டானது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக ஓடியது. விளைவு இப்போது 5 தமிழ்ப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார் இவர்.


அதோடு மேலும் சில டைரக்டர்களும் இவரிடம் கதை சொல்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது நிவின்பாலி என்னென்ன படங்களில் நடிக்கிறார் என்பதை விசாரித்தபோது, பிரபுதேவாவின் நிறுவனம் தயாரிக்கும் படம், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ' படத்தை தயாரிக்கும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம், கௌதம்மேனன் உதவியாளர் இயக்கும் படம் உள்பட 5 படங்களில் தற்போது இவர் கமிட்டாகியிப்பதாக சொல்கிறார்கள். 


மேலும் நிவின்பாலி நடிக்கும் எல்லா படங்களும்  மலையாள சினிமாவையை மனதில் கொண்டு தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப் படங்களாகத்தான் தயாராகிறதாம்.


Find Out More:

Related Articles: