தமிழகத்தில் இயங்கும் கன்னட பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை...

frame தமிழகத்தில் இயங்கும் கன்னட பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை...

Sekar Tamil
சென்னை:
காவிரி பிரச்னையால் கர்நாடகத்தில் பெரும் பதற்றம் உருவாகி உள்ள நிலையில் சென்னையில் இயங்கி வரும் கன்னடப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் வன்முறைகள் வெடித்து வருகின்றன. இதனால் அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இயங்கும் கன்னடப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள கன்னட சங்கம் சார்பில் இயக்கும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் அயன்புரம் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த கன்னட பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More