வாவ் ரொம்ப கியூட்டா இருக்கே... டிடியை கிறுகிறுக்க வைத்த நர்ஸ்

Sekar Chandra
சென்னை:
வாவ் ரொம்ப கியூட்டா இருக்கே நீ என்று விஜய் டிவி தொகுப்பாளினி "டிடி" போட்டுள்ள பதிவு இந்த நர்சை உச்சி குளிர வைத்துள்ளதாம். அந்த நர்ஸ் யார்?


வேறு யாரு நம்ம ரெமோ சிவகார்த்திகேயன்தான் அது. ரெமோ படத்தில் சிவகார்த்திக்கேயனின் நர்ஸ் வேடத்தில் உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைத்து தரப்பினர் மத்தியிலும் வெகுவாக பாராட்டுகளை குவித்து வருகிறது. 


தற்போது டிவி தொகுப்பாளினி டிடியும் வாவ் ரொம்ப கியூட்டா இருக்கே நீ என்று டுவிட்டரில் சிவகார்த்திகேயனை பாராட்டு உள்ளார். இவர் இப்படி என்றால் படத்தோட ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் கூட நான் இந்தப்படத்தில் இரண்டாவது ஹீரோயின்தான் என்று கூறியுள்ளார்.


நடிகர் சதீஷ் ஒரு படி மேலேயே போய்விட்டார். எப்படி தெரியுங்களா? தனது டுவிட்டர் பதிவில் எனக்கே உன்ன லவ் பண்ண தோணுதும்மா. செமயா இருக்கா என்று ட்டுவிட்டு உள்ளார். இப்படியே போனா அவ்வளவுதான் சிவா... உங்களை கடத்திக்கிட்டு போனாலும் போயிடுவாஙக... ஜாக்கிரதை...!


Find Out More:

Related Articles: