ஒலிம்பிக் கமிட்டிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள சர்வதேச எதிர்ப்பலை

Sekar Tamil
ரியோ:
எதற்கு இது? சர்வதேச அளவில் எழும் எதிர்ப்பால் ஒலிம்பிக் கமிட்டி அதிர்ந்துதான் போய் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு பாலின சோதனை நடத்தப்படுவது வழக்கம். இதற்கு சர்வேதச அளவில் சமூக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் பெரும் அதிர்வலைகள் எழுந்துள்ளது.


 ஆண் தன்மை கொண்டவர்கள் சிலர் மகளிர் பிரிவில் கலந்து கொள்வார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினரால், பெண் தானா என்று உறுதிப்படுத்தும் பாலின சோதனை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த சோதனைகள்தான் பெரும் அவமானகரமாக அமைகிறது என்று எதிர்ப்பலைகள் எழுந்துள்ளது.


 3 கட்டமாக நடத்த்படும் இந்த சோதனையில் கண்ணால் பார்த்து முடிவு செய்வது, வீராங்கனைகளை நிர்வாணமாக்கி சோதனை செய்வது, க்ரோமோசோம் டெஸ்ட், டி.என்.ஏ டெஸ்ட் போன்ற அறிவியல் பூர்வமான டெஸ்ட் ஆகியவற்றை நடத்தி பின்னர் பெண் என்று உறுதி செய்வார்கள்.


ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டி நடத்தும்போதும் இத்தகைய சோதனைக்கு, சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பும். ஒலிம்பிக் கமிட்டி கண்டு கொள்ளாது. ஆனால் தற்போது ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் இந்த சோதனை நடத்தப்பட்டதை அறிந்து சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தற்போது ஒலிம்பிக் கமிட்டி அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.   


Find Out More:

Related Articles: