300 ஆண்டுகள் பழமையான அம்மன் கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்

Sekar Chandra
அன்னூர்  பகுதியை அடுத்த பாசூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள  300 ஆண்டுகள் பழமையான குப்பாயம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதியன்று நடக்கவிருக்கிறது. இங்கு அம்மன் சுயம்பாக தோன்றி அருள்பாலிக்கிறார் என்று கூறப்படுகிறது.   


இக்கோவிலில் 36க்கு, 56 அடி அளவு மகா மண்டபம் மற்றும் ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ளது.  மேல்சாளகாரத்தில் 108 செம்பு கலசங்கள் பொருத்தப்படுகின்றன. கோவில் வளாகத்தில், கோவில் முன்புறம் 250 ஆண்டுகளான அரசமரமும், ஆலமரமும் உள்ளன. ஆகம விதிப்படி கோவிலின் திருப்பணிகள், பல லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ளன.  


வரும் 7ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்க உள்ளது. பின்னர் புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தம் எடுத்து வர பக்தர்கள் புறப்பட்டு செல்லுதல் நடக்கிறது. 8ம் தேதி மகாலட்சுமி ஹோமம் மற்றும் கோமாதா பூஜை நடக்கிறது. 9ம் தேதி காலையில் விமான கோபுர கலசம் வைத்தல் நடக்கிறது. 10ம் தேதி காலை 7.35 மணிக்கு சக்தி விநாயகர், குப்பாயம்மன் மற்றும் 108 பரிவார கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.     



Find Out More:

Related Articles: