உணவு பற்றாக்குறையை நீக்க களம் இறங்கிய நாசா

Sekar Tamil
அமெரிக்கா:
உணவு பற்றாக்குறையை நீக்க களம் இறங்கி இருக்காம் நாசா. இதற்காக தனிப்பட்ட செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


நாசா ஆராய்ச்சி மையம், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் உணவுப் பற்றாக்குறையை தீர்க்க ‘செர்விர் புராஜக்ட்’ எனும் திட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு களமிறங்கி உள்ளது.


இதற்காக பிரத்யேகமான செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உள்ளது. இயற்கை பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளை விண்வெளியில் இருந்து கண்காணித்து அதற்கு ஏற்ப உணவு உற்பத்தியை திட்டம் போட்டு செய்ய அறிவுறுத்துகிறது.


இதனால் உணவுப் பயிர்களை பாதுகாத்து பஞ்சம் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. நல்ல திட்டம்தான். வரவேற்போம்.


Find Out More:

Related Articles: