
சென்னைக்கு குடிநீர் அனுப்ப உத்தரவிட்ட கேரள முதல்வர்!
சென்னையில் மழை பெய்யவில்லை என்பதால் குடிநீர் தரும் நீர்நிலைகள் வறண்டுவிட்டது. லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை வைத்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.சென்னையின் வறட்சியை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் அலுவலகம் கேரளாவில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.