நியூயார்க்:
நேரடி... நேரடியாக... நேரடி விவாதம் தொடங்கிடுச்சாம்... என்ன விஷயம் என்றால்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் - ஹிலாரி கிளிண்டன் இடையேயான முதல் நேரடி விவாதம்தாங்க அது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவ., 8ல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஹாப்ஸ்ட்ரா பல்கலையில், ஹிலாரி - டிரம்ப் இடையேயான முதல் விவாத நிகழ்ச்சி தொடங்கியது. நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் விவாதம் 90 நிமிடங்கள் இந்த விவாதம் நடக்கிறது.