அத்தை செய்த கொடூரம்... மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை

frame அத்தை செய்த கொடூரம்... மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை

Sekar Tamil
கான்பூர்:
18 நாள் பச்சிளம் குழந்தையை அதன் அத்தை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் மக்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் ஷியாம் மருத்துவமனையில் சரிதா என்ற பெண் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையை காணவில்லை என்று அலறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனையே அல்லோகலப்பட்டது. தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர்.


பின்னர் மருத்துவமனை முழுவதும் குழந்தையை தேடும் பணி தீவிரமடைந்தது. அப்போது ஒரு இடத்தில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்க அப்பகுதியை நோக்கி மருத்துவமனை ஊழியர்கள் ஓடியுள்ளனர்.


அந்த குழந்தை குரங்குகள் வருவதைத் தடுக்க போடப்பட்ட கம்பிவலைகளில் துணியுடன் சிக்கி அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையின் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்ன தெரியுங்களா?


அந்த சிசிடிவி காட்சிகளில் சரிதா, குழந்தை அன்மோலுடன் வார்டை விட்டு வெளியே வருகிறார். பின்னர் குழந்தை இல்லாமல் வார்டுக்கு திரும்புவதுதான் அது. அவ்வளவுதான் டென்ஷனான போலீசார் சரிதாவிடம் தங்கள் பாணியில் விசாரணை நடத்த இதில் உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார் சரிதா. 


அன்மோலின் தாய்க்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் என்பதால் 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசினேன் என கூறி அனைவரையும் அதிரவைத்துள்ளார். தற்போது சரிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சரிதா... குழந்தைக்கு அத்தை முறை வேண்டுமாம்... என்ன கொடுமைங்க இது.



Find Out More:

Related Articles:

Unable to Load More