ஹராரே:
ஐயம் ஆல்ரைட் என்பது போல் தன்னை பற்றி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜிம்பாவே அதிபர்.
விஷயம் என்னன்னா? உடல்நிலை மிகவும் மோசமாகி வெளிநாட்டில் மரணப் படுக்கையில் கிடக்கிறார் என்று கூறப்பட்ட ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே இன்று நலமுடன் நாடு திரும்பினார்.
ஆப்பிரிக்க நாட்டு அரசியல் தலைவர்களில் நெல்சன் மண்டேலாவுக்கு அடுத்தபடியாக மிகவும் பரிச்சயமான மூத்த தலைவர்ரா பர்ட் முகாபே (92) தான். ஜிம்பாப்வே நாட்டின் அதிபரான இவர் சமீபத்தில் வெளிநாடு சென்றார்.
திடீரென நோய்வாய்ப்பட்ட அவர்து பாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல்நிலை மிகவும் மோசமாகி மரணப் படுக்கையில் கிடப்பதாக பரபரப்பாக ஒரு வதந்தி கிளம்பியது. இதற்கு ஜிம்பாவே அரசு மறுப்பு சொன்னாலும் அந்நாட்டு மக்கள் நம்ப தயாராக இல்லை. தங்கள் அதிபருக்கு என்னவோ நடந்து விட்டது என்று அவர்கள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில், பாதுகாவலர்கள் துணையுடன் வெளிநாட்டில் இருந்து ராபர்ட் முகாபே இன்று விமானம் மூலம் ஹராரே நகரை வந்தடைந்துள்ளாராம். அவர் எப்போதும், அதாவது வழக்கம்போல் கலகலப்பாக காணப்பட்டார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்புறம் என்ன அந்நாட்டு மக்கள் இப்போ ஹேப்பியோ... ஹேப்பியாம்!