மலேசிய அமைச்சருக்கு நன்றி கூறிய ஜோ

SIBY HERALD
ராட்சசி படத்தை பார்த்து பாராட்டிய மலேசிய அமைச்சருக்கு நடிகை ஜோதிகா நன்றி தெரிவித்துள்ளார். ஜோதிகா நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'. இப்படம் கல்வியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்காவிட்டாலும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் படத்திற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்த படத்தை மலேசிய அமைச்சர் மாஸ்லே மாலிக் என்பவர் பார்த்து ஜோதிகா மற்றும் படக்குழுவினரை பாராட்டி இருந்தார்.  


தமிழ் படம் ஒன்றை பார்த்து மலேசிய அமைச்சர் பாராட்டியது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. இந்நிலையில் பாராட்டு தெரிவித்த அமைச்சருக்கு நடிகை ஜோதிகா நன்றி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஒரு இந்திய திரைப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்ததோடு, படத்தில் காட்டியதுபோல் தங்கள் நாட்டில் கல்வியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய தங்களுக்கு எனது நன்றிகள். உங்களின் பாராட்டு எங்கள் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.  



இந்த படத்தில் பணிபுரிந்த 90% பேர் அரசு பள்ளியில் படித்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இந்த படத்தில் வலிமையான காட்சிகளாக வந்துள்ளது. அடிப்படை மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும், அனைத்து தரப்பினர்களும் கல்வி விஷயத்தில் சமமாய் நடத்தப்பட வேண்டும் என்ற எங்களது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தப்படம். இந்தியாவில் மிகப்பெரிய கல்வி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எங்களது இந்த முயற்சிக்கு எங்களது கல்வி அமைச்சரும் இந்த படத்தை பார்த்து பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இவ்வாறு நடிகை ஜோதிகாக தனது நன்றி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles: