வலையில் சிக்கி மருத்துவ குணம் கொண்ட சுறா... தோல், பீலி என்ற துடுப்பு, கறி என்று பகுதி பகுதியாக விற்பனை

Sekar Chandra
ராமேஸ்வரம்:
பிடிக்கக்கூடாது என்று தடை  இருந்தாலும் வலையில் சிக்கினால் விடுவார்களா மீனவர்கள். அப்படிதான் நடந்துள்ளது அந்த சுறாவிற்கும்.


பாம்பன் பகுதியில் மீனவர் வலையில் மருத்துவ குணம் கொண்ட ராட்சத சுறா மீன் சிக்கியது. கரைக்கு கொண்டு வந்த மீனவருக்கு கொண்டாட்டம்தான். அந்த சுறா மருத்துவ குணங்கள் நிறைந்ததாம். அப்புறம் என்ன?


வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக மீனின் மேல் புறம், பக்கவாட்டு பகுதி, வால் பகுதியில் உள்ள பீலி என்ற துடுப்பை மீனவர்கள் தனியாக அறுத்து எடுத்துக் கொள்ள, இதர பகுதியை கேரளாவை சேர்ந்த மீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். 


மத்திய அரசு தடை விதித்துள்ள அரியவகை மீன் இனங்களின் பட்டியலில் சுறாவும் உள்ளது. நாங்களா பிடித்தோம் வலையில் சிக்கியது என்றுதான் மீனவர்கள் சொல்வார்கள்...



Find Out More:

Related Articles: