மவுன விரதம் கலைத்தார்... ஆமாங்க உண்மைதான்.... போட்டுடைத்தார்

frame மவுன விரதம் கலைத்தார்... ஆமாங்க உண்மைதான்.... போட்டுடைத்தார்

Sekar Tamil
சென்னை:
ஆமாங்க... உண்மைதான்... என்று பூசணிக்காயை போட்டு உடைத்தது போல் பட்டென்று இத்தனை நாள் மவுனத்தை கலைத்துள்ளார் இவர்.


யார்ன்னு சொல்லுங்க பார்க்கலாம். தெரியலையா... கோலிவுட், டோலிவுட் என்று எல்லா வுட்டுகளிலும் பேசப்படும் விஷயம் சமந்தா, நாக சைத்தன்யா காதல் விஷயம்தான். 


இவர்கள் அடுத்த வருடம் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வரும் நிலையில்... இருவரும் மவுன விரதம் கடைப்பிடித்து வந்தனர். இந்நிலையில் அணையை உடைத்துக் கொண்டு வெளிவரும் தண்ணீர் போல் தனது காதலை போட்டு உடைத்துள்ளார் சமந்தார். 


ஒரு பேட்டியில் நானும், நாக சைதன்யாவும் காதலிக்கிறோம். எங்கள் திருமணத்திற்கு இன்னும் நிறைய நாள் இருக்கிறது. அதனால்தான் இதைப்பற்றி நாம் ஏன் பேசவேண்டும் என்று தான் அமைதியாக இருக்கிறோம்.


எங்களுக்கு எங்களுடைய பெற்றோர்களின் ஆசீர்வாதம் இருக்கிறது, இதில் எதுவும் மறைப்பதற்கு இல்லை என்று அதிரடித்துள்ளார். 


Find Out More:

Related Articles:

Unable to Load More