அன்று நோ நோ, இன்று வா வா

SIBY HERALD
ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருந்து வந்தவர் தமன்னா. பால்வண்ண அழகியான இவர் அஜீத், விஜய் , விக்ரம், சூரியா ,கார்த்தி ,மகேஷ் பாபு, பவன் கல்யாண் என, தமிழ் மற்றும் தெலுங்கின் அணைத்து பெரிய நடிகர்களுடனும் ஜோடி போட்டு கலக்கி வந்தவர் ஆவார்.



 சமீப காலமாக பெரிதாக படங்கள் எதுவும் இல்லாமலும், நடித்த படங்களும் சரியாக போகாமல் ஸ்கெட்ச் போல பிளாப் ஆகவும், துவண்டு போயிருந்தார் தமன்னா. கைவசம் காமோஷ் என்ற ஹிந்தி படமும், சந்தீப் கிஷன் ஜோடியாக நடிக்கும் ஒரு படமுமே இருக்க இவர் எதிர்பாரா விதமாக வந்து இவர் மடியில் விழுந்தது சீனியர் நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் அடுத்த பட வாய்ப்பு. 



சில வருடங்களுக்கு முன்னர் வெங்கடேஷ் நடித்த ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கேட்கப்பட்ட போது, இளம் நடிகர்களுடன் தான் ஜோடி சேருவேன் என்று நக்கலாக பதில் சொன்னவர் தான் இதே தமன்னா. இன்று வெங்கடேஷ் ஜோடியாக F2 என்ற படத்தில் தெலுங்கில் நடித்து வருகிறார். இதில் சுவாரசியம் என்னவென்றால், இதிலும் இவர் மெயின் நாயகி அல்ல, முதன்மை கதாநாயகி மெஹரீன் தான், தமன்னா வெறும் சைடு ரோல் தான் என்கின்றனர். 


Find Out More:

Related Articles: