கியாராவின் பிளாப் காதலன்!

frame கியாராவின் பிளாப் காதலன்!

SIBY HERALD
நடிகை கியாரா அத்வானி பாலிவுட்டில் எம் எஸ் தோணி வாழ்க்கை படத்தில் தோனியின் மனைவி சாட்சியாக நடித்து புகழ் பெற்றவர். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் அவர் நடித்த படங்கள் ஓடவில்லை என்றாலும் கூட தெலுங்கு திரை உலகில் நுழைந்தார். சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு ஜோடியாக அவரது சமீபத்திய பிளாக்பஸ்டரான பரத் அனே நேனு படத்தில் நடித்திருந்தார்.

Image result for kiara advani apherald


இந்நிலையில் இவர் நேற்று தனது இருபத்தி ஆறாவது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த பிறந்தநாள் பார்ட்டியில் யாரும் எதிர்பாரா விதமாக பிளாப் நாயகன் சித்தார்த் மல்ஹோற்றா வந்திருந்தார். இவர் ஆலியா பாட்டின் முன்னாள் காதலர் ஆவார். இவரும் கியாராவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பார்த்த மீடியாக்காரர்கள் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் டேட்டிங்கில் இருப்பதாகவும் உறுதியே படுத்திவிட்டனர்.

Image result for kiara advani apherald


இயக்குனர் கரண் ஜோகர் தான் சிதாரத்தையும் கியாராவையும் அறிமுகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. கியாராவின் ராசியாவது சித்தார்த்துக்கு ஹிட் படங்கள் ஏதாவது கொடுக்குமா என்று பார்க்கலாம். கியாரா அத்வானி அடுத்ததாக ஹிந்தியில் இரண்டு படங்களும் தெலுங்கில் ராமச்சரன் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 


Find Out More:

Related Articles: