நயனுக்கு மச்சம் மாறிப் போச்சே
அதுமட்டுமல்ல இமைக்கா நொடிகள், மாயா, கோலமாவு கோகிலா ஆகிய நயனை மையமாக கொண்ட ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களும் வசூலிலும் வரவேற்பிலும் பிஸ்த்து கிளப்பின. ஒரு படமானது தயாரிப்பாளர்களை, விநியோகஸ்தர்களை, தியேட்டர் அதிபர்களை, ரசிகர்களை திருப்திப்படுத்தினால் அது ஹிட் மூவிதான். இப்படியான படங்களை தொடர்ந்து கொடுத்ததினாலும், இப்படியான படங்களில் தொடர்ந்து இருந்ததினாலும்தான் நயனை 'லேடி சூப்பர் ஸ்டார்' என ரஜினிக்கு நிகராக கொண்டாடியது கோலிவுட். கடந்த சில நாட்களாக நயனின் நிலை அப்படியில்லை. டோரா, ஐரா, கொலையுதிர் காலம் என அவரை மையமாக வைத்து வந்த படங்களும், வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் என அவர் ஹீரோயினாக இருந்த படங்களும் தோல்வியை தழுவியுள்ளன. இருந்தாலும் இடையில் அஜித்தின் விஸ்வாசம் மட்டும் அவரை காப்பாற்றியுள்ளது.
ஆனாலும் அந்த கெத்தை மிஸ்டர் லோக்கல், ஐரா, கொலையுதிர் காலம் ஆகியன முடித்துக் கட்டிவிட்டன. இந்த தொடர் தோல்வியால் நயனின் மார்க்கெட் சரிந்துள்ளது. அவரை தேடி வரும் கதைகளும், தயாரிப்புகளும் சுணங்க துவங்கியுள்ளன. மேலும், நயனின் சம்பளமும் தானே குறைந்துள்ளதாக தகவல்கள். விஸ்வாசம் தந்த உச்சத்தால் விஜய்யின் பிகில், ரஜினியின் தர்பார் என செம்ம ப்ராஜெக்ட்டுகள் இரண்டில் நயன் இருப்பதால் ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளார். இதுதானுங்க உலகம்! (இந்நிலையில் இது நாள் வரையில் நயன் தனியாக நடித்துக் கொண்டிருந்த 'த்ரில்லர்' கதைகளில் இப்போது தேசிய விருது பெற்றிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிக்க துவங்கியிருக்கிறார் என்பது கொசுறு சேதி)