உதயநிதியின் அடுத்த நாயகி!

SIBY HERALD
நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடைசியாக நிமிர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவர் சீனு ராமசாமி இயக்கத்தில் தமன்னா ஜோடியாக கண்ணே கலைமான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.



அடுத்ததாக மிஸ்கின் இயக்கத்தில் அதிதி ராவ் ஹைதரி ஜோடியாக சைக்கோ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் தொட்டாச்சிணுங்கி மற்றும் ப்ரியசகி ஆகிய படங்களை இயக்கிய அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.



இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக ஆர் எக்ஸ் நூறு புகழ் பாயல் ராஜ்புட் மற்றும் கயல் அனந்தி நடிக்க உள்ளனர். 


Find Out More:

Related Articles: