'வழக்கு எண் 18/9' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மனிஷா. இதையடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவர் நடித்து வந்த படங்கள் அனைத்தும் பிளப்பானதால், தற்போது அவருக்கு படவாய்ப்புகளே இல்லை.
இந்நிலையில், அவர் தற்போது வருவாய் ஈட்டுவதற்கு, துணி கடை ஒன்றை, நடத்தி வருகிறார். சென்னையை சேர்ந்த பிரபலமான பகுதி ஒன்றில், அவர் சொந்தமாக துணி கடை ஆரம்பித்துள்ளார்.
சினிமாவில் அவர் சம்பாதித்த முழு பணத்தையும், இந்த துணி கடையில் முதலீடு செய்து, கடையை நடத்தி வருகிறாராம். கடை ஆரம்பித்து கொஞ்ச நாள் மட்டுமே, ஆனதால் வியாபாரம் பெரிதாக இன்னும் சூடு பிடிக்கவில்லையாம்.
பார்ப்போம் இதிலாவது அவர் உச்சத்தில் போவாரா என்பதை...