ஜெய்யின் நாயகிக்கு கல்யாணம்

frame ஜெய்யின் நாயகிக்கு கல்யாணம்

SIBY HERALD
நடிகை சுவாதி தமிழில் ஜெய் மற்றும் சசிகுமார் நடிக்க சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகம் ஆனார். தெலுங்கில் கலர்ஸ் நிகழிச்சியின் மூலமாக கலர்ஸ் சுவாதி என்று புகழ் பெற்றவராக இருந்த இவர் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அஷ்ட சம்மா படத்தில் மகேஷ் பாபு ரசிகையாக ஆடவாரி மாடலுக்கு பார்த்தாலே வேறுலே படத்தில் துறுதுறு பெண்ணாக என பல படங்களில் கலக்கினார்.

Image result for swathi reddy


கவர்ச்சியாகவும் சில படங்களில் நடித்தவர் அடுத்ததாக மலையாள பட உலகிலும் நுழைந்தார். மலையாளத்தில் ஆமென் மற்றும் நார்த் இருபத்தி நான்கு காதம் படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

Image result for swathi reddy


தமிழில் நடிகர் ஜெய்யுடன் இனைந்து சுப்ரமணியபுரம் தவிர கனிமொழி மற்றும் வடகறி ஆகிய படங்களிலும் நடித்ததால் இருவரையும் வைத்து கிசுகிசு கூட கிளம்பியது. இந்நிலையில் சுவாதி இன்று அவரது காதலரான விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இனிமேல் சினிமாவில் சுவாதி நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles: