தமன்னாவின் ரெட்டை ஆட்டம்!

SIBY HERALD
நடிகை தமன்னா, தெலுங்கில் சில மாதங்களுக்கு முன்னர் குயின் ஒன்ஸ் அகைன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் 2014ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான குயின் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் ஒரிஜினலில் கங்கனா ரனாவத் நடித்த கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கவுள்ளார்.



 இந்நிலையில் தான் இந்த படத்தை இயக்க முதலில் ஒப்பந்தமான இயக்குனர் நீலகண்ட திடீரென படத்திலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து ஆவ் படத்தின் இயக்குனர் பிரஷாந்த் வர்மா இந்த படத்தை இயக்க அழைக்கப்பட்டார். தனது பிறந்தநாளை கொண்டாடி ஷூட்டிங்கை துவக்கினார் பிரஷாந்த். 



இந்த படத்தில் தமன்னாவுக்கு இரண்டு கெட்டப்கள் உள்ளன. அதில் ஒன்றில், சிறு ஊரை சேர்ந்த ஒரு அப்பாவி பெண்ணாக, பாவாடை தாவணி அணிந்து, புட்டி கண்ணாடி அணிந்தபடி இயல்பாகவும், அதற்கு அடுத்த கெட்டப்பில், பாரிசில் நடப்பதாக வரும் பகுதியில் மாடர்ன் உடைகள் அணிந்து படு கவர்ச்சி அவதாரத்தில் நடிக்க உள்ளார் தமன்னா. 



Find Out More:

Related Articles: