மலையாள மங்கை அனு இம்மானுவேல், நிவின் பாலியின் ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து தெலுங்கில் நானி நடித்த மஜ்னு மூலம் நுழைந்தார் அனு.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டு உண்ணாடு ஜாக்ரதா, ஆக்சிஜன் போன்ற படங்களில் நடித்த அணு இம்மானுவல், அடுத்ததாக தமிழில் விஷால் நடிக்க மிஸ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் நடித்து முத்திரை பதித்தார். ஆனால் இவ்வாண்டு நடித்த தெலுங்கு திரைப்படமான அங்யாதவாசி படு தோல்வி அடையவே இவரது மார்க்கெட் ஆட்டம் கண்டது.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த இருபத்தி ஐந்தாம் படமான இது, பெரும் எதிர்பார்ப்புடன் வந்து படு தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து கடைசி நம்பிக்கையாக இவர் நடித்த நா பேரு சூர்யா இப்பொழுது வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்த இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை நோக்கி சென்று கொண்டுள்ளது.
இப்படியெல்லாம் தனது படங்கள் அனைத்தும் தோல்வி அடையவே, நொந்து போயுள்ள அனு இம்மானுவல் அடுத்தடுத்து படங்கள் வேண்டும் என, அதிரடி கவர்ச்சி காட்ட முடிவு செய்துள்ளாராம். பிகினி போட்டோஷூட் ஒன்றும் ரெடி செய்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஆல்பம் அனுப்பியுள்ளாராம் அணு. விரைவில் அணு இம்மானுவேலின் அதிரடி டூ பீஸ் ஆட்டத்தை திரையில் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.