திருமணத்தை தள்ளி வைத்து வோட்டு!
நேற்று காலை இவர்களின் திருமண முகூர்த்தம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தம்பதிகள் திருமணம் நடைபெறுவதற்கு முன் மனாலியில் உள்ள ஓட்டு சாவடிக்கு சென்று தங்களின் கடமையான வாக்குரிமையை பதிவு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணில் தானும் தன்னுடைய மனைவியும் முன்னரே பேசி முடிவு செய்திருந்ததாகவும் தங்கள் திருமணம் சற்று தாமதமாக நடைபெறுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஒவ்வொரு வாக்கும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கூறினார் . இவர்களுடைய திருமணம் மூன்று மணி நேரம் தாமதமாக நடைபெற்றது.