தேடி வந்தபோது மறுத்த சாய் பல்லவிக்கு மீண்டும் நல்ல வாய்ப்புகள் வருமா?

J Ancie

ப்ரேமம் படத்திற்கு பிறகு தேடி வந்த தமிழ் நல்ல பட வாய்ப்புகளை மறுத்த சாய் பல்லவி மீண்டும் கரு என்னும் தமிழ் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். ப்ரேமம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் நெஞ்சில் ஃபேவரிட் நடிகையானவர் சாய்பல்லவி.




கோவையை சேர்ந்த சாய்பல்லவிக்கு ப்ரேமம் படத்துக்கு பிறகு பல நல்ல வாய்ப்புகள் தேடி வந்தன. முக்கியமாக முன்னணி இயக்குநர்கள் மணிரத்னம், கவுதம்மேனன், முன்னணி ஹீரோக்கள்  விக்ரம், சிம்பு ஆகியோர்  படங்களில் ஜோடிப்போல் கேட்டபோது கூட முடியாது என்று மறுத்துவிட்டு தனது டாக்டர் படிப்பை தொடர சென்றுவிட்டார் சாய்பல்லவி.





இப்போது பிரபல இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் கரு என்ற ஹீரோயின் ஓரியண்டட் படம் மூலம் மிண்டும் தமிழுக்கு வருகிறார். இந்த படத்துக்கு பின் தமிழில் தொடர்ந்து நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறாராம். ஆனால் முன்பு சாய்பல்லவியால் வேண்டாம் என்று மறுக்கப்பட்டவர்கள் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என்பது சந்தேகம் தான்!

Find Out More:

Related Articles: