அறிவிச்சாச்சு அறிவிச்சாச்சு....தனுஷின் கொடி முதல் லுக்கை...

Sekar Tamil
இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ் தனது 'கொடி' திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் நாள் மற்றும் நேரத்தை, தனது டிவிட்டர் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். 


துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ் முதன்முறையாக ரெட்டை வேடத்தில் நடித்துள்ளார். த்ரிஷா மற்றும் அனுபமா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். அரசியல் கதையை கொண்டு திகிலாக உருவான இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் விரைவில் வெளிவர உள்ளது. 


ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கும், 'கொடி' முதல் லுக் போஸ்டர், வரும் புதன்கிழமை, செப் 28-ம் தேதி, அன்று மாலை 7 மணிக்கு, வெளிவருகிறது.  


மேலும் தனுஷ் தயாரித்து நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 


வரும் தீபாவளிக்கு இப்படம் திரையரங்கில் வெளிவருகிறது.


Find Out More:

Related Articles: